வாழ்க சமுதாயம்...
வளர்க சேனைத்தலைவர் குலம்...

சேனைத்தலைவர் சங்க சேவைகள்

கல்வி அபிவிருத்தி திட்டம்

20.12.2015 தேதி சிவகாசியில் கல்வி அபிவிருத்தி குழுவின் முதல் கூட்டம் மாநில சங்க நிர்வாகிகளின் முன்நிலையில் நடைபெற்றது. அதில் கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் திரு.C.ஸ்ரீதரன், தருமபுரி, திரு.S. சம்சு, குற்றாலம், DR.திரு.S.S.செண்பக விநாயகம், சிவகிரி திரு.வைமா. திருப்பணி செல்வன், ராஜபாளையம் மற்றும் திரு.S.மாரிமுத்து சென்னை ஆகியோர் கலந்துகொண்டார்கள். நோக்கம் : +1ல் படிக்கும் போதே ஆர்வமுள்ள மாணவ மாணவியரை 1. மாவட்ட வாரியாக தேர்ந்தெடுத்து, IAS, IPS, Group-I,II மற்றும் மேற்படிப்பு போன்றவற்றில் படிக்க வைக்க திட்டமிடல். 2. குறைந்தபட்ச வேலை வாய்ப்பு தகுதி உருவாக்குதல். 3. திட்டமிட்டபடி வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தல் 4. இராணுவம் முப்படைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தல், காரைக்குடி, வேலூர் உள்ள அகெடமியில் IAS, மற்றும் தகுதிப் படிப்புக்கு உறுதுணையாக இருந்து உதவுதல். 5. மாநில சங்கம் அறக்கட்டளை மூலம் கல்லூரி, அல்லது பொறியியல் கல்லூரி மற்றும் +1,+2க்கு ஆன பள்ளி தொடங்குவதற்கான ஆக்கபூர்வவேலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக. 6. சங்க அறக்கட்டளைக்கு அதற்கு தேவையான மூலதனநிதி (Corpus Fund) உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளல். உருவாக்கக்கூடிய (Corpus Fund)மூல தனநிதியை கல்வி அபிவிருத்தி வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை கண்காணித்தல். 7. பல நல்ல நிலைகளில் உள்ள (உத்தியோகம், தொழில்துறை, I.T கம்பெனி, மற்றும் பலதுறைகளில்) நம் சமுதாய மக்களை இனம் கண்டு தேர்ந்து எடுத்து அவர்களை சேனையர் முரசு மூலம் அங்கீகரிக்கவும், அவர்கள் மூலம் கல்வி அபிவிருத்தி குழுவிற்கு மூல தன நிதியை (Corpus Fund) பெருக்க ஆவன செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.