வாழ்க சமுதாயம்...
வளர்க சேனைத்தலைவர் குலம்...

சேனைத்தலைவர் சங்க வரலாறு

சென்னை மாகாண சேனைத்தலைவர் மகாஜன சங்கம் - தோற்றம்

சிவ.மா.நாராயணசாமி சேனைத்தலைவர், பட்டுகோட்டை - இவர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், அப்போது தமிழ்நாட்டில் பிரபலமான தமிழ் தினசரி பத்திரிகையான சுதேசமித்ரனில் ஆர்கனைசராக பணி புரிந்தவர். பணியின் நிமித்தம் தமிழ்நாடு, திருவிதாங்கூர், மைசூர் பகுதிகளுக்கு சென்று வர நேரிட்டது, அப்போது நமது சேனைத்தலைவர் சமூக மக்கள் முதலியார், செட்டியார், மூப்பனார், பிள்ளை போன்ற பட்டங்களால் அழைக்கபடுவதையும், நமது குலமக்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் வாழ்வதை கண்டு, அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பட்டுக்கோட்டையில் தனது "இலக்குமி விலாசம்" என்ற இல்லத்தில் 23-6-1912 அன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த முதற்கூட்டத்திற்கு வருகைதந்த முக்கியமானவர்கள்:

பாரிஸ்டர் கே.சி.சுப்ரமணிய செட்டியார்,

தில்லையாடி புலவர் ந.தம்பியப்ப செட்டியார்,

கொல்லம் டி.பி.மூப்பனார்

அப்போது நமது சமுதாய மக்கள் கல்வித்துறை, பொருளாதாரம், அரசியல் இவைகளில் தாழ்ந்த நிலையில் இருப்பதை கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதை பற்றி விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, 1913-ம் ஆண்டு ஜூன் திங்கள் ஒன்பதாம் நாள் பாண்டிசேரிக்கு அருகாமையில் உள்ள மயிலம் என்ற முருகன் ஸ்தலத்தில் நமது சமுகத்தை சேர்ந்த படாங்கு அப்பு செட்டியார் அவர்களின் சத்திரத்தில் முதல் சென்னை மாகாண சேனைத்தலைவர் மகாஜன சங்க மாநாடு நடைபெற்றது. அதற்கு படாங்கு வைத்தியலிங்க செட்டியார் வரவேற்பு குழுத்தலைவராக பணியாற்றினார். இந்த மாநாட்டில் பாரிஸ்டர் கே.சி.சுப்ரமணிய செட்டியார் அவர்கள் சென்னை மாகாண சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவராகவும், தில்லையாடி புலவர் ந.தம்பியப்ப செட்டியார் மற்றும் கொல்லம் டி.பி.மூப்பனார் மாகாண காரியதரிசிகலாகவும் தேர்ந்தெடுக்கபட்டனர், இதுவே நமது மாநில சங்க அமைப்பின் தோற்றமாகும்.

நமது மாநில மகாஜன சங்க அமைப்பு ஏற்பட வித்திட்டவர் பட்டுக்கோட்டை சிவ.மா.நாராயணசாமி செட்டியார் என்றால் மிகையாகாது.

பாரிஸ்டர் கே.சி.சுப்ரமணிய செட்டியார்: இவர் நாகை மாவட்டம் பொறையாறு என்ற ஊரில் பெறும் வணிக குடும்பத்தில் 13-4-1886-இல் பிறந்தார். இவரது முன்னோர்கள் மோரீஸ், சிசேல்ஸ் போன்ற நாடுகளில் வியாபார அமைப்புகளை ஏற்படுத்தி, பொருள் ஈட்டி பெருந்தனவந்தர்களாக விளங்கினர். இவர் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று, தாயகம் திரும்பி தனது இளம் வயதிலேயே நமது மாநிலசங்க அமைப்பின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். அன்றைய ஜஸ்டில் கட்சியின் அங்கத்தினராகி முக்கிய அமைச்சர்களான சர்.எ.டி. பன்னீர் செல்வம், சர்.முத்தையா முதலியார் போன்றோரிடம் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார். நமது சமுதாயத்தை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசு ஆணை பெறுவதற்கு பெரும் முயற்சி செய்தார். அவர் தொழில் நிமித்தமாக நாகபட்டினத்தில் தங்கியிருந்த அவரது இல்லமே மாநில சங்கத்தின் தலைமையகமாக விளங்கியது.

சிதறிகிடந்த நமது சமுதாய மக்களை தட்டி எழுப்பி அவர்கள் பல துறைகளிலும் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

தில்லையாடி புலவர் ந.தம்பியப்ப செட்டியார்: நாகை மாவட்டம் தில்லையாடி என்ற ஊரில் பிறந்து தனது சிறு வயதிலேயே தென்னாப்ரிக்கா டர்பன் நகருக்கு சென்று அச்சகத்தில் பணி புரிந்தார், அப்போது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியுடன் தொடர்பு கொண்டு அவருடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டு காந்தியின் நண்பர்களுள் ஒருவரானார். இவர் ஜோதிட வல்லுநர் என்றாலும் அதை தொழிலாக கொள்ளவில்லை. தாயகம் திரும்பிய பின் நமது சமுதாய முன்னேற்றத்திற்காக பெரிதும் பாடுபட்டார். ஆரம்பத்தில் நடைபெற்ற மாநில மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கொல்லம் டி.பி.மூப்பனார்: இவருடைய முழுபெயர் தெய்வநாயகம் பழனி மூப்பனார். இவர் திருவிதாங்கூர் பகுதி நமது சமுதாயத்தின் முதல் பட்டதாரியாவார். திருவிதாங்கூர் அரசாங்கத்தால் சர்வே இலாக்காவில் உயர் பதவி வகித்தவர். அரசு பணியில் இருந்தாலும் நமது சமூக மக்களின் நலனில் அக்கறை கொண்டு குறிப்பாக மாணவர்கள் திருவிதாங்கூர் அரசில் கல்வி சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பெற பெரிதும் உதவினார். மேலும் நமது தென் மாவட்ட மக்களை ஒன்று சேர்க்கவும், மாநில சங்கம் அமைவதற்கும் மிகவும் பாடுபட்டவர். திருகுற்றாலத்தில் 1915-இல் நடைபெற்ற மாநில மாநாட்டிற்கு வரவேற்பு குழுதலைவராக இருந்து மாநில மாநாடு சிறப்பாக நடைபெற வழிவகுத்தார்.

மத்திய - மாநில அரசுகளில் பங்கு பெற்ற நமது சமுதாய பிரமுகர்கள்:

டெல்லி பாராளுமன்றம்:
1. திருமுடி ந.சேதுராம செட்டியார், காங்கிரஸ் எம்.பி (பாண்டிச்சேரி தொகுதி 1962-67)
2. தோழர் காத்தமுத்து, கம்யூனிஸ்ட் எம்.பி (நாகபட்டினம் தொகுதி 1967-72)

டெல்லி ராஜ்ய சபை:
1. தில்லை வில்லாளன், (சிதம்பரம்) தி.மு.க. எம்.பி. (1968-74)
2.திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) காங்கிரஸ் எம்.பி. (1996-2002)
தமிழ்நாடு அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.
1. மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ
2. திரு.எஸ்.நாராயணன், (திருநெல்வேலி) அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு.
3. திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (தென்காசி & கடையநல்லூர்) காங்கிரஸ் எம்.எல்.ஏ
4. திரு. ஆர்.சுடலைமுத்து (போடி) தி.மு.க எம்.எல்.ஏ.
5. திரு.எஸ்.என். வேணுகோபால் செட்டியார் (சேலம்) காங்கிரஸ் எம்.எல்.சி.
6. திரு. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.
புதுச்சேரி: 1. திரு.கே.எஸ்.கோவிந்தராஜ் (காரைக்கால் வடக்கு) காங்கிரஸ் எம்.எல்.ஏ.
தொகுப்பு: வீ.கணபதி
Reference:
As told by, Er.S.Balakrishanan, Scientist, ISSRO, Trivandram (Grandson of D.P.Moopanar).
"Who is Who" - Book on Parliment Members.
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் By, தமிழ்நாடு தொல்லியல் துறை, சேனையர் வரலாறு etc.,